இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.காந்தி கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு பணி குறித்து இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மேல்விஷாரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மேல்விஷாரம் நகராட்சி ஆணையாளர் அவர்களுடன் மேல்விஷாரம் நகரத்த்தில்கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தொழிலதிபர்கள் ராணிடெக் சேர்மன் ரமேஷ்கே.எச்.குரூப்ஸ் கலிமுல்லாஇப்ராஹீம் ராணி டெக் ஜபருல்லா சௌக்கார் முன்னாபாய் மற்றும் தி.மு.க.நகர செயலாளர் ஏ.மன்சூர் பாஷா மற்றும் அனைத்து கழகத்தினர் உடனிருந்தனர்.
மேலும், வாலாஜாப்பேட்டை நகராட்சி ஆணையாளருடன் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்து நோய் தடுப்பு முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க.நகர செயலாளர் த.க.பா.புகழேந்தி இளைஞரணி உமர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதன் " alt="" aria-hidden="true" />
தொடர்ச்சியாக,இராணிப்பேட்டை நகரத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 3-வது நாளாக காந்தி பிரியாணி வழங்கினார்.
<no title>மேல்விஷாரம் பகுதியில் காந்தி எம் எல் ஏ திடீர் ஆய்வு .....